கேங்மேன்  தேர்வு முடிவு எப்போது? - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 29, 2021

கேங்மேன்  தேர்வு முடிவு எப்போது?

 கேங்மேன்  தேர்வு முடிவு எப்போது?


கேங்மேன் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்' என, மின் வாரிய அதிகாரிகளிடம், விண்ணப்பதாரர்கள் கேள்வி எழுப்பினர்.


தமிழக மின் வாரியம், களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 10 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.அதற்கான, உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு ஏற்கனேவே முடிந்த நிலையில், தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண் வெளியிடப்பட்டன


கேங்மேன் தேர்வு தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில், அந்த பதவிக்கு விண்ணப்பித்த சிலர், நேற்று, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்து, 'தேர்வு முடிவு எப்போது வெளியாகும்' என, அதிகாரிகளிடம், கேள்வி எழுப்பினர்.


அவர்களிடம், 'தேர்வு தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், வேலைக்கு தேர்வானவர்களின் விபரம் வெளியிடப்படும்' எனக்கூறி, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்

No comments:

Post a Comment