கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 29, 2021

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்


புதுச்சேரி: மூன்றாம் கட்ட கணினி கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை கலை அறிவியல் கல்லுாரி யில் நேற்று துவங்கியது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு சென்டாக் இரண்டு கணினி கலந்தாய்வு நடத்தி இடங்களை ஒதுக் கீடு செய்தது.


நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி இடங்களை www.centac puducherry.in என்ற இணைய தளத்தில் ஒதுக்கீடு செய்தது.இடம் கிடைத்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரி பார்த்து சேர்க்கப்பட்டனர். மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 2 ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது


.தாகூர் கல்லுாரிபல்கலைக்கழக தேர்வு காரணமாக, தாகூர் அரசு கல்லுாரி கால அட்டவணைப்படி மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. நேற்று ஆங்கிலம், தத்துவவியல், வேதியியல், கணிதம், பிரெஞ்ச் பாட பிரிவுகளுக்கு சேர்க்கை நடந்தது.இரண்டாவது நாளான இன்று 30 ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரவியல்,


 இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கும், 1ம் தேதி பி.காம்., சைக்காலஜி, வரலாறு, தமிழ் பாடப் பிரிவுகளுக்கும், 2ம் தேதி சுற்றுலா, சோசியாலஜி, தாவரவியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை தாகூர் அரசு கலை கல்லூரியை அணுகி சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment