பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: பிப்.1 முதல் ஆன்லைனில் ஆய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 29, 2021

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: பிப்.1 முதல் ஆன்லைனில் ஆய்வு

 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: பிப்.1 முதல் ஆன்லைனில் ஆய்வு


அங்கீகாரம் நீட்டிப்பு வழங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பிப்.1 முதல் இணையவழியில் ஆய்வு நடத்தப்படவுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.


கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டு (2020-21) பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை இணையவழியில் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சில கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய அறிவுறுத்தி அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டது.


அதன்படி பல்வேறு கல்லூரிகள் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து ஒப்புதல் அறிக்கையை சமா்ப்பித்துள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பிப்.1 முதல் 5-ம் தேதி வரை இணையவழியில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதற்கான ஏற்பாடுகளை கல்லூரிகள் செய்து கொள்ள வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment