மீண்டும் கருத்து கேட்பதால் பலனில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

மீண்டும் கருத்து கேட்பதால் பலனில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல்

 மீண்டும் கருத்து கேட்பதால் பலனில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல்


பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதால் பலன் இல்லை' என, தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுசெயலாளர் நந்தகுமார் கூறுகையில்,''பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதால் பலன் இல்லை. மருத்துவர் குழு, கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்க வேண்டும். ஏற்கனவே, பெற்றோரிடம் கருத்துகள் பெறப்பட்டும், எதிர்கட்சிகள் அழுத்தத்தால், பள்ளிகள் திறப்பது கைவிடப்பட்டது.


 இம்மாத இறுதிக்குள் பள்ளிகள் திறக்காவிடில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஊதியம், அரசு வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட பாட திட்டம் வெளியிடாமல், தேர்வு அட்டவணை வெளியிட கூடாது,'' என்றார்.

No comments:

Post a Comment