ஏழை குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

ஏழை குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி திட்டம்

 ஏழை குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி திட்டம்


கோவை:'யங் இண்டியன்ஸ்' சார்பில், 'கோயமுத்துார் விழா', கடந்த, 2 முதல் நடத்தப்படுகிறது; 10ம் தேதி வரை, பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது.


அதன் ஒரு பகுதியாக, பயன்படுத்திய மற்றும் பயன்பாட்டில் உள்ள மொபைல்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை சேகரித்து, ஆன்-லைனில் படிக்க வசதியில்லாத, கோவை கிராமப்புற மாணவர்களுக்கு சேகரித்து வழங்கும் நிகழ்வு துவக்கப்பட்டுள்ளது.விழா அமைப்பாளர்கள் கூறியதாவது:


மாணவர்கள் கல்வி கற்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் இணையத்தை பெரிதும் நம்பியிருக்கும் நேரத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் இடைவெளி காணப்படுகிறது.பொதுமக்கள், தங்களிடம் உள்ள பழைய/ பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் சாதனங்களை வழங்கலாம்.


 முதல் நாளான நேற்று, 150 சாதனங்கள் பெறப்பட்டன. ரேஸ்கோர்ஸில் உள்ள ஆன் தி கோ, ஆர்.எஸ்.புரம் தட்ஸ் ஒய் உணவு, பீளமேடு ஆக்ஸிசோன் ஆகிய இடங்களில், வரும் 10க்குள், வழங்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment