பொதுத்தேர்வில் மாற்றம்: கல்வித்துறை முயற்சிக்கு வரவேற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 27, 2021

பொதுத்தேர்வில் மாற்றம்: கல்வித்துறை முயற்சிக்கு வரவேற்பு

 பொதுத்தேர்வில் மாற்றம்: கல்வித்துறை முயற்சிக்கு வரவேற்பு


பாடத்திட்டம் குறைத்ததன் தொடர்ச்சியாக, பொதுத்தேர்விலும் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக, வெளியாகியுள்ள அறிவிப்பு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், கடந்த 19ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. 


வேலை நாட்களை கருத்தில் கொண்டு, 35 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. வினாவங்கி தயாரிக்கும் பணிகளும் நடக்கின்றன.பொதுத்தேர்வை மையப்படுத்தி, மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க, தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


 இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பு, தற்போதைய நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய கல்வித்துறை முன்வர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.


வேண்டும் ப்ளூ பிரிண்ட்


பிரபாகரன், மாநில செயலாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்: 


பாடத்திட்டம் மாற்றிய பிறகு, எந்ததெந்த பகுதியில் இருந்து, எவ்வளவு மதிப்பெண் கேள்விகள் இடம்பெறும் என்ற, 'ப்ளூ பிரிண்ட்' வெளியிடும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்கள் முழுமையாக பள்ளிக்கு வராத நிலையில், தற்போது ப்ளூ பிரிண்ட் வெளியிட்டால் தான், ஆன்லைன் மூலம், குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமாவது, படிக்க வைக்க முடியும்


இன்டர்னல்' முறை


அருளானந்தம், மாநில தணிக்கையாளர், தமிழ் நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்:


 பத்தாம் வகுப்புக்கு 25 மதிப்பெண்களும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 30 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு நடத்தப்படும். ( மின்னல் கல்விச்செய்தி)செய்முறை அல்லாத பாடங்களுக்கு, கல்லுாரிகளை போல, இன்டர்னல் முறை அறிவிக்கலாம். பள்ளிகளில் திருப்புதல் தேர்வுகள் நடத்தி, இம்மதிப்பெண்கள் கணக்கிட உத்தரவிடலாம். இம்முறை மூலம், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், தேர்ச்சி பெறுவதில் தடை ஏற்படாது


இன்னும் குறைக்கலாம்!


பீட்டர் ராஜா, மாநிலதலைவர், தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம்:


 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 35 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுமையாக மாணவர்கள் பள்ளிக்கு வராததாலும், பல பிரிவுகளாக மாணவர்களை பிரித்து, வகுப்பு கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாலும், 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கலாம். தேர்தல் அறிவித்தால், அப்பணிகளுக்கு ஆசிரியர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்படவுள்ளதால், பொதுத்தேர்வு முறைகளில், மாற்றம் கொண்டுவருவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment