பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாமினல் எண் தயாரிப்பு துவக்கம்  - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 27, 2021

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாமினல் எண் தயாரிப்பு துவக்கம் 

 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாமினல் எண் தயாரிப்பு துவக்கம் 


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் கையாளப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு முன்பு, தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 


வினாவங்கி தயாரிப்பு, குறைந்தபட்ச பாடத்திட்டம் உருவாக்குதல், சிலபஸ் மேலும் குறைப்பு என, கல்வித்துறையின் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு மத்தியில், நாமினல் எண் தயாரிக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, பள்ளிக்கல்வி தகவல் முறைமை (எமிஸ்) இணையதளத்தில் உள்ள, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின், பெயரில் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள, தலைமையாசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment