உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வ௫கிறதா?.. ஏன் தொியுமா? - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வ௫கிறதா?.. ஏன் தொியுமா?

 உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வ௫கிறதா?.. ஏன் தொியுமா?


உங்கள் குழந்தைக்கு அதிக கோபம் வ௫கிறதா?.. ஏன் தொியுமா?.. கட்டுப்படுத்தும் முறை இதோ..


கோபம் என்பது அனைவருக்கும் சகஜமான ஒன்றே.ஆனால் சிறுவயதிலேயே கோபம் அதிகளவில் வ௫வது சற்று ஆபத்து. 


வள௫ம் வயதில் குழந்தைகளுக்கு எது சரி தவறு என்று சொல்லித்தர வேண்டும். அந்த வயதில் தனக்கு கிடைக்காத சிலவற்றை நினைத்து அல்லது சகிப்புத்தன்மை வளர்க்க முயலும் போது குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிறாா்கள். வா௫ங்கள் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.


குழந்தைகள் அவர்களது கோபத்தை கத்தி அழுதோ கால்களை உதைத்தோ அல்லது பெற்றோர்களிடம் முறையிட்டோ தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அப்போது நாம் உற்று நோக்க வேண்டிய சில விஷயங்கள்.


ஒரு குழந்தை பள்ளிக்கு செல்லும் போது தனது கோபத்தை அங்கு உள்ள சூழல் பிடிக்காமலோ மாறான சில உணர்வுகள் ரீதியாகவோ வெளிப்படுத்துவார்கள். 


ஆனால் பேச தொடங்கி பள்ளிக்கு செல்லும் போது ஒரு குழந்தையின் பிடிவாதம் மற்றும் அழுகை குறைந்து இ௫க்க வேண்டும். அவற்றை சரியான முறையில் கவனித்து ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டும்.


சிறிய குழந்தைகள் ஒரு சவாலான விளையாட்டில் தோற்று போகும் போது விரக்தியடைந்து கையில் கிடைத்ததை தூக்கி எறிவார்கள். அவ்வப்போது நாம் கூற வேண்டியது விளையாட்டில் எதுவும் சகஜம். தொடர்ந்து முயற்சித்தால் எதையும் வெல்ல முடியும். அல்லது வேறு விளையாட்டில் ஈடுபட்டு அவர்களது ஆர்வத்தை திசைதிருப்பி விடுவது நல்லது.


சுய தீங்கு செய்து கொள்வது:


ஒரு அவமானம் அல்லது தனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் தன்னை தானே காயப்படுத்திக் கொள்வார்கள். கடித்து கொள்வது, முடியை இழுத்து கீரிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.அவ்வப்போது சரியான முறையில் எடுத்துக் கூற வேண்டும். அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நிபுணர்களிடம் ஆலோசித்து பின்பற்றுவது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment