சொன்ன சொல் என்ன ஆச்சு? ஆசிரியர் சங்கங்கள் கேள்வி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 3, 2021

சொன்ன சொல் என்ன ஆச்சு? ஆசிரியர் சங்கங்கள் கேள்வி

 சொன்ன சொல் என்ன ஆச்சு? ஆசிரியர் சங்கங்கள் கேள்வி


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட, போராட்டத்தில் ஈடுபட்டு, இரு ஆண்டுகளாகியும், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, திரும்ப பெறாமல் இழுத்தடிப்பதாக, ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.


மாநிலம் முழுக்க, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட, முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்பித்தல் பணிகள் முடங்கின. 


அரசு துறைகளிலும், 90 சதவீத ஊழியர்கள் போராட்ட களத்தில் இருந்ததால், பணிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தை கைவிடுமாறு, முதல்வர் வேண்டுகோள் விடுத்ததன் பேரில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.


உரிய கால அவகாசத்திற்குள் பணிக்கு திரும்பாத, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதை திரும்ப பெற கோரி, ஆசிரியர் சங்கங்கள் சார்பில், கடந்த இரு ஆண்டுகளாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால், பதவி உயர்வு உள்ளிட்ட பணிப்பலன்கள் பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 


தேர்தல் நெருங்கும் நிலையில், ஆசிரியர் சங்கங்கள், தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள், அவர்களிடம் பெறப்பட்ட விளக்கம் குறித்து, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்போதே, ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ய போவதாக தெரிவிக்கப்பட்டது.


 இரு ஆண்டுகளில் பலமுறை, ஆசிரியர் சங்கங்கள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசின் கோரிக்கையை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது. எனவே, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே, ஒழுங்கு நடவடிக்கை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்.-


அருளானந்தம், மாநில தணிக்கையாளர் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment