சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 3, 2021

சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்

 சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்


சுகாதாரத்துறை அறிவுரை படி பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்க இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகங்கை அரசு ஊழியர்கள் சங்க கட்டடத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.


 ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முத்துப்பாண்டியன், உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். 


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பீட்டர் வரவேற்றார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் சங்கர் பேசினார்.


சுகாதாரத்துறையின் அறிவுரையின் படி பள்ளிகளை சுழற்சி முறையில் திறந்து கல்வி கற்க ஏதுவாக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் ஆணை வெளியிட வேண்டும். சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் மாணவர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தயாராக உள்ளோம், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்புச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் சிங்கராயர், ரஞ்சித்குமார்,நரசிம்மன், வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment