புதிய கொள்கை குறித்து வாட்ஸ் ஆப் விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 20, 2021

புதிய கொள்கை குறித்து வாட்ஸ் ஆப் விளக்கம்

 புதிய கொள்கை குறித்து வாட்ஸ் ஆப் விளக்கம்


'எங்களுடைய புதிய கொள்கை குறித்து தவறான தகவல்கள் பரவியுள்ளது. அது குறித்து விரிவாக விளக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 


எந்த வகையிலும், தனி நபர் தகவல்களை பரிமாற மாட்டோம்.

'இந்திய அரசு கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக உள்ளோம்' என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.


சமூக தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், சமீபத்தில் தன், 'பிரைவசி' எனப்படும் தனி நபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றம் செய்துள்ளது


வரும், பிப்., 8ம் தேதிக்குள் இந்த கொள்கையை ஏற்காவிட்டால், செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது' என, அந்த நிறுவனம் கூறியிருந்தது.


புதிய கொள்கையின்படி, தன் பயனாளிகள் குறித்த தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது


இந்த புதிய கொள்கை குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி, அந்த நிறுவனத்துக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளதாவது:

புதிய கொள்கை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.


 எந்த நிலையிலும், செய்தி அனுப்புபவர் மற்றும் அதை பெறுபவரை தவிர, வேறு யாராலும் தகவல்களை பார்க்க முடியாது.

பயனாளிகள் குறித்த எந்தத் தகவலையும், பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம். தொழில் செய்வோருக்கு உதவும் வகையில், புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.


 எங்களுடைய செயல்பாடுகள் குறித்து, இந்திய அரசு கேட்டு உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அனுப்பப்படும்.இவ்வாறு, நிறுவனம் கூறியுள்ளது

No comments:

Post a Comment