அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 20, 2021

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணல்

 அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணல்


அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல், அரக்கோணத்தில், பிப்ரவரி 1ல் நடக்கிறது.


அஞ்சல் துறையின் அரக்கோணம் கோட்டத்தில், காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பொறுப்புக்கு உரிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


இதில், பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், பிப்., 1ல், அரக்கோணம் கோட்டம், அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கும், நேர்காணலில் பங்கேற்கலாம்.


இப்பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 18 முதல், 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.வேலைவாய்ப்பற்றோர், இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், ஏஜன்ட்டுகள், படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள், கம்ப்யூட்டர் திறன் பெற்றவர்கள் உள்ளிட்டோர் நேர்காணலில் பங்கேற்கலாம்.


ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடர்பான அசல், நகல் சான்றிதழுடன் வர வேண்டும்.


இந்தத் தகவல், அரக்கோணம் அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment