அரசு ஊழியர் வீட்டு கடன் நடைமுறையில் திடீர் மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 20, 2021

அரசு ஊழியர் வீட்டு கடன் நடைமுறையில் திடீர் மாற்றம்

 அரசு ஊழியர் வீட்டு கடன் நடைமுறையில் திடீர் மாற்றம்


அரசு ஊழியர்கள், வீடு கட்ட முன்பணம் கோரும் போது, அதற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில், அரசு ஊழியர்கள் நிலம் வாங்கி, வீடு கட்டவும், கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கவும், அரசு முன்பணம் வழங்குகிறது.


 குறைந்தபட்சம், நான்கு ஆண்டுகள் பணி புரிந்தவர்கள், இதற்கு தகுதி பெறுவர்.புதிய வீடு கட்ட, வாங்க, 25 லட்சம் ரூபாய் வரை, முன்பணம் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.


இதில், அரசு ஊழியர்கள், எந்த மாவட்டத்தில் வீடு வாங்குவதாக இருந்தாலும், அவர்கள் எங்கு பணி புரிகின்றனரோ, அந்த மாவட்ட கலெக்டரின் ஒப்புதலை பெற வேண்டும்.அந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட வீடு எங்கு அமைந்து உள்ளதோ, அந்த மாவட்ட கலெக்டர் வாயிலாக, கள ஆய்வு அறிக்கை பெறலாம். இந்த நடைமுறை, தற்போது அமலில் உள்ளது.


சமீபத்தில், அயல் பணி முறையில், டில்லியில் பணிபுரியும் ஒரு ஊழியர், ராமநாதபுரத்தில் வீடு வாங்க முன்பணம் கோரி, விண்ணப்பிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.


இதையடுத்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலர் டி.கார்த்திகேயன், கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதம்:வீட்டுக்கடன் முன்பணம் வழங்குவதில், ஏற்கனவே உள்ள நடைமுறையில், சில சிக்கல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது


இதில், வெளி மாநிலத்தில் பணியில் உள்ள, தமிழக அரசு ஊழியர்கள், எந்த மாவட்டத்தில், வீடு வாங்க அல்லது கட்டும் பணியில் ஈடுபட்டாலும், அந்த மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்றால் போதும்.இது குறித்த நடைமுறை மாற்றத்தை ஏற்று, அனைத்து கலெக்டர்களும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment