டான்செட் நுழைவு தேர்வு :அண்ணா பல்கலை அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 20, 2021

டான்செட் நுழைவு தேர்வு :அண்ணா பல்கலை அறிவிப்பு

 டான்செட் நுழைவு தேர்வு :அண்ணா பல்கலை அறிவிப்பு


முதுநிலை படிப்புக்கான, 'டான்செட்' நுழைவு தேர்வு, மார்ச், 20, 21ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், அரசு பல்கலைகளின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்றவற்றில் மாணவர்களை சேர்க்க, டான் செட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையால், இந்த தேர்வு நடத்தப்படுகிறது


.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, டான்செட் நுழைவு தேர்வு தேதிகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.


இதன்படி, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்றவற்றுக்கு, மார்ச், 21ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,வுக்கு, மார்ச், 20ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 


இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. பிப்.,12 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.கூடுதல் விபரங்களை, https://tancet.annauniv.edu/tancet/index.html 


என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment