ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வு: கூடுதல் வாய்ப்பு கிடையாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 25, 2021

ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வு: கூடுதல் வாய்ப்பு கிடையாது

 ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வு: கூடுதல் வாய்ப்பு கிடையாது


சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, கடந்தாண்டு, அக்., 4 ல் நடந்தது. 'கொரோனா வைரஸ் பரவல் இருந்ததால், சரியாக தயாராக முடியவில்லை. அதனால், கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. 


இந்த வழக்கில், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில், 4.86 லட்சம் பேர் எழுதினர்.கடந்தாண்டு, மே மாதத்தில் நடக்க வேண்டிய தேர்வு, அக்டோபரில் நடந்தது. அதனால், தேர்வுக்கு தயாராக போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை ஏற்க முடியாது.மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்தோர், ஊரடங்கால் இடம் மாறியிருந்தால், புதிய இடத்திலேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 


கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிப்பது அல்லது வயது வரம்பை நீட்டிப்பது, இந்த தேர்வின் நடைமுறையை சீர்குலைத்துவிடும். 


தவறான முன்னுதாரணமாகி விடும்.தேர்வை எழுதிய,4.86 லட்சம் பேருக்கு அநீதி இழைப்பதாக அமைந்துவிடும். அவர்கள் வழக்கு தொடர வாய்ப்பு அளித்துவிடும். அதனால், கூடுதல் வாய்ப்பு அளிக்க முடியாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணை, 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment