பொதுத்தேர்வு வினாத்தாளில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 26, 2021

பொதுத்தேர்வு வினாத்தாளில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 பொதுத்தேர்வு வினாத்தாளில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறையில், மாற்றம் இருக்குமா என்பது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு பணிகள் துவங்கி உள்ளன. கொரோனாவால் பாடங்கள் நடத்துவது பாதிக்கப்பட்டதால், பொதுத்தேர்வை எளிமையாக நடத்துவது குறித்து, பள்ளி கல்வித் துறையும், தேர்வுத் துறையும் ஆலோசித்து வருகின்றன


இதன்படி, மிகவும் சிக்கலான கேள்விகள் இல்லாமல், எளிமையான வினாக்கள் நிறைந்த, வினாத்தாள் தயாரிக்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், ''பொதுத் தேர்வில் மாற்றங்கள் இருந்தாலோ அல்லது எளிமைப்படுத்துவது இருந்தாலோ, அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


சென்னையில் சாரண, சாரணியர் இயக்க வளாகத்தில், நேற்று நடந்த குடியரசுதின நிகழ்ச்சியில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:


 சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கு, இலவசசீருடை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும். பொதுத் தேர்வுகளை எளிமையாக நடத்துவதற்கு, அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அளவில் ஆலோசனை நடந்து வருகிறது. மாற்றங்கள் இருந்தால், விரைவில் அறிவிப்போம்.பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அவர்களின் விருப்பப்படி, விரும்பும் மாவட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment