10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 26, 2021

10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல்

 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல்


குடியரசு தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள சாரண சாரணியர் இயக்க தலைமையகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேசியக்கொடி ஏற்றினார். அதற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


 தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். குறைந்த கால இடைவெளியில் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


 அதை  கருத்தில் கொண்டு கேள்வித்தாள் வடிவமைப்பில் எளிமை மற்றும் மாற்றம் கொண்டு வரத்தான் கருத்து கேட்கிறோம். பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டறிந்த பிறகு முதல்வரோடு கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


 அதனால் தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு எடுப்போம். 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அதற்கு 98 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். தமிழகத்தில் நூலகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment