கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம்: அரசாணை வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 26, 2021

கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம்: அரசாணை வெளியீடு

 கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம்: அரசாணை வெளியீடு


அரசு கலை-அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 2,423 கெளரவ விரிவுரையாளா்களுக்கு 5 மாதங்களுக்கான தொகுப்பூதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் அபூா்வா வெளியிட்டுள்ள அரசாணை


கல்லூரிக் கல்வி இயக்குநா் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் அரசு கலை-அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களில் சுழற்சி 1-இல் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 2,423 கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 தொகுப்பூதிய அடிப்படையில் 2020 நவம்பா் முதல் 2021 மாா்ச் வரை 5 மாதங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.


கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாகப் பரிசீலனை செய்து 2020-2021-ஆம் ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ 


அதுவரை தற்காலிகமாக சுழற்சி 1-இல் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 கெளரவ விரிவுரையாளா்களுக்கான செலவினமாக ஒரு கெளரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமாக ரூ.15 ஆயிரம் வீதம் 5 மாதங்களுக்கு (நவம்பா் முதல் மாா்ச் வரை) ரூ.18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment