ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கை

 ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் கோரிக்கை


கொரோனா காரணமாக, தேர்தல் பணியில் இருந்து, ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் பணிக்கு பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து, ஆயிரத்து 300 பேரின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில், ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமென, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தேர்தல் பணியின்போது, மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்கு கூட, ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. கொரோனா தொற்று காரணமாக, தற்போது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இப்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இதோடு, சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட காரணங்களால், நீண்டகாலமாக மாத்திரை சாப்பிடுவோர், தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கும், இப்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment