ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகள் துவங்க ஆயத்தம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 28, 2021

ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகள் துவங்க ஆயத்தம்

 ஒன்பது, பிளஸ் 1  வகுப்புகள் துவங்க ஆயத்தம்


ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் விரைவில், வகுப்புகள் துவங்க, ஆயத்தப்பணிகள் நடக்கின்றன.தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.


 தொடர்ந்து, ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கும், வகுப்புகள் துவங்க வேண்டுமென, தனியார் பள்ளிகள் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாக, அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் தெரிவித்துள்ளார். இவ்விரு வகுப்பு மாணவர்களுக்கும், கற்பித்தல் பணிகள் துவங்குவது குறித்து, கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன.


 ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களும் பள்ளிக்கு வரும்பட்சத்தில், குழுவாக பிரித்து, வகுப்புகள் கையாள, போதுமான ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாரியாக உள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள், எமிஸ் இணையதளத்தில் இருந்து திரட்டும் பணிகள் நடக்கின்றன' என்றனர்.

1 comment:

  1. அதிக மாணவர்கள் உள்ள அரசு பள்ளிக்கு தான் மிக கடினம். தனியார் பள்ளி கேட்டு கிட்டா ஆரம்பிக்க வேண்டியது தான். அரசு பள்ளியில் சில பெற்றோர்கள் பயந்து கொண்டு அனுப்புவதில்லை. அரசு அரசு பள்ளிகளை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete