கோவை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்: பிப்., 28ல் செலுத்துகிறது 'இஸ்ரோ' - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

கோவை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்: பிப்., 28ல் செலுத்துகிறது 'இஸ்ரோ'

 கோவை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்: பிப்., 28ல் செலுத்துகிறது 'இஸ்ரோ'


கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்கள், பிப்., 28ல், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட உள்ளது.கோவை, நீலாம்பூர், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் சொந்தமாக வடிவமைத்த செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளனர். கல்லூரி வளாகத்தில் செயற்கைகோள் தரைதள கண்காணிப்பு நிலையம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.'


வீடியோ கான்பரன்சிங்' முறையில் பங்கேற்ற, 'இஸ்ரோ' தலைவர் சிவன், தரைதள கண்காணிப்பு நிலையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ள செயற்கைகோள், 'இஸ்ரோ' தளத்தில் இருந்து ஏவப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சிகளில் வரும் நாட்களில் நம் நாட்டில் அதிகளவு மாணவர்களின் பங்களிப்பு இருக்கும்.


 கோவை, சென்னை மற்றும் நாக்பூர் பகுதிகளை சேர்ந்த, மூன்று கல்லூரிகளின் மாணவர்கள் தயாரித்துள்ள செயற்கைகோள்கள், பிப்., 28ல், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால் கூடுதல் சிறப்பு,'' என்றார்


.ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி தலைவர் டாக்டர் தங்கவேலு கூறுகையில், ''2010ம் ஆண்டு எங்கள் கல்லூரியிலேயே, ஒரு செயற்கைகோள் ஆய்வகத்தை அமைத்தோம். இதன் பலனாக, 'ஸ்ரீசக்தி சாட்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளோம். இதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் தேவையான உதவிகளை செய்தனர். இந்த செயற்கைகோள், 460 கிராம் எடையுள்ளது. பூமியில் இருந்து, 500~575 கி.மீ., துாரத்தில் சுற்ற உள்ளதால், குறைந்த சுற்றுப்பாதை கொண்ட (லியோ) செயற்கைகோளாக இருக்கும். 300 செயற்கைகோள்களுக்கு இடையில், இது தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக செயல்படும்,'' என்றார்


.என்ன பயன்கள்!'


ஸ்ரீசக்தி சாட்' பி.எஸ்.எல்.வி., சி~51 செயற்கைகோள் பிப்., 28 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இது, ஆறு மாதங்கள் விண்ணில்சுற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், மூன்று ஆண்டுகள் சற்று குறைந்த அளவிலான துாரத்தில் சுற்றும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு கண்டறிய பயன்படுத்தலாம். காட்டுத்தீ, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து, வங்கிகள் மற்றும் பிற பாதுகாப்பு பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment