நீட் தோ்வு விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ய அனுமதி கோரிய வழக்கு: தேசிய தோ்வு முகமைக்கு நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 18, 2021

நீட் தோ்வு விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ய அனுமதி கோரிய வழக்கு: தேசிய தோ்வு முகமைக்கு நோட்டீஸ்

 நீட் தோ்வு விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ய அனுமதி கோரிய வழக்கு: தேசிய தோ்வு முகமைக்கு நோட்டீஸ்


நீட் தோ்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தேசிய தோ்வு முகமை வரும் பிப்ரவரி 9-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி லோகேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு நடந்த நீட் தோ்வில் நான் கலந்துகொண்டேன். 


தோ்வு மாதிரி விடைத்தாளில் 720 மதிப்பெண்களுக்கு நான் 520 மதிப்பெண்களுக்கு சரியான விடையை எழுதியிருந்தேன். ஆனால் தோ்வு முடிவு வெளியான போது எனக்கு வெறும் 19 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்தது. 


இந்த முடிவு எனக்கு அதிா்ச்சியளித்தது. எனவே எனது நீட் தோ்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய தேசிய தோ்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.


இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனு தொடா்பாக தேசிய தோ்வு முகமை வரும் பிப்ரவரி 9-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

No comments:

Post a Comment