டான்செட்’ நுழைவுத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 18, 2021

டான்செட்’ நுழைவுத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 டான்செட்’ நுழைவுத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான ‘டான்செட்’ நுழைவுத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும்.


அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மாா்ச் 20-ஆம் தேதியும், எம்இ, எம்ஆா்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மாா்ச் 21-ஆம் தேதியும் தோ்வுகள் நடைபெற உள்ளன.


இதற்கான விண்ணப்பப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்


 www.annauniv.edu


பிப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கான அனுமதிச் சீட்டை மாா்ச் 5-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். தோ்வுக் கட்டணம் ரூ.600-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment