தேசிய எறிபந்து போட்டியில் தமிழக மாணவி சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 9, 2021

தேசிய எறிபந்து போட்டியில் தமிழக மாணவி சாதனை

 தேசிய எறிபந்து போட்டியில் தமிழக  மாணவி சாதனை


திருமங்கலம் அரசு பள்ளி மாணவி தேசிய எறிபந்து போட்டியில் சாதனை படைத்துள்ளார். திருமங்கலம் கக்கன்காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். கடை வைத்துள்ளார்.


 இவரது மகள் யுவமதி (17). திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார் (தற்போது ஆன்லைன் வகுப்பு). கடந்தாண்டு (கொரோனா பரவலுக்கு முன்பு) திருச்சியில் தேசிய கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எறிபந்து போட்டியில் மாணவி யுவமதி கலந்து கொண்டு விளையாடினார்.


இதில், இவரது 9 பேர் கொண்ட அணி இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது. கொரோனா காரணமாக இதற்கான சான்றிதழ் இவருக்கு வழங்கப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் மாணவியின் வீட்டிற்கு வந்ததுள்ளது.


 இதுகுறித்து மாணவி யுவமதி கூறுகையில், ‘‘எனது தந்தை பெட்டிக்கடை வைத்துள்ளார். ஏழ்மையில் உள்ள தனக்கு சிறுவயது முதலே எறிபந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டில் சாதிக்க வேண்டும் என ஆவல் உள்ளது.


பள்ளி நாள்களில் பல்வேறு மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். தற்போது முதல்முறையாக தேசிய அளவிலான போட்டியில் எறிபந்தில் கலந்து வெற்றி பெற்றுள்ளேன். 


குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. என்னை ஊக்கப்படுத்தினால் பல்வேறு பதக்கங்களை பெற்று தருவேன்’’ என்றார்.

No comments:

Post a Comment