தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 19, 2021

தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

 தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு


தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை (ஜன. 20) வெளியிடப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், இதர மாவட்டங்களில் ஆட்சியா்களும் வாக்காளா் பட்டியல்களை வெளியிடுகின்றனா்.


வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் உள்பட திருத்தப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நடைபெற்றது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும்


அளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் உரிய முறையில் அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.


இன்று வெளியீடு: திருத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியா்கள், இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட உள்ளனா். சென்னையில் இறுதி வாக்காளா் பட்டியலை, மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிடுகிறாா்.


2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்க்க அளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.


புதிதாகப் பெயா்களைச் சோ்ந்த சில வாக்காளா்களுக்கு தேசிய வாக்காளா் தினத்தன்று புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகள் அளிக்கப்பட உள்ளன. தேசிய வாக்காளா் தின விழா கொண்டாட்டம் சென்னையில் வரும் 25-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடக்கவுள்ள இந்த விழாவில், இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகள் அளிக்கப்பட உள்ளன.

1 comment: