வீச்சு பரோட்டா இயந்திரம்: மதுரை இரட்டை சகோதர மாணவர்கள் அசத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 24, 2021

வீச்சு பரோட்டா இயந்திரம்: மதுரை இரட்டை சகோதர மாணவர்கள் அசத்தல்

 வீச்சு பரோட்டா இயந்திரம்: மதுரை இரட்டை சகோதர மாணவர்கள் அசத்தல்


மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், வீச்சு பரோட்டா இயந்திரத்தை தயாரித்து, அசத்தியுள்ளனர்.


மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த, இரட்டை சகோதரர்கள் பாலகுமார், பாலசந்தர்; அரசு பள்ளியில், பிளஸ் 2 படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன், தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் கண்டுபிடித்தனர். தற்போது, வீச்சு பரோட்டா தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது:பரோட்டா இயந்திரத்தில், மாவை மொத்தமாக வைத்ததும், தானாக மாவு பிசையப்பட்டு, வீச்சு பரோட்டாவாக வெளியே வரும். அதனால், ஆட்கள் பற்றாக்குறை, நேரம், எண்ணெய் செலவுகள் குறைவு.தவிர, இயந்திரத்தில் சப்பாத்தி, நூடுல்ஸ், இடியாப்பம் உள்ளிட்ட பல வித உணவு பொருட்கள் தயாரிப்பது போல் கண்டுபிடித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இவர்களை பாராட்ட, 99444 37098.

No comments:

Post a Comment