சிதம்பரத்தில் தொடரும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 24, 2021

சிதம்பரத்தில் தொடரும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

 சிதம்பரத்தில் தொடரும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்


சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன், எம்.எல்.ஏ., மற்றும் துணைவேந்தர் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. 


அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்ட, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், தனியார் கல்லூரிகளை விட, கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


அரசு கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி, மாணவ ~ மாணவியர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 21ம் தேதி, கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளித்து, மாணவர் விடுதிகளை மூடியதுடன், உணவு, தண்ணீர், மின்சாரத்தை துண்டித்தது.


இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நேற்று, 47வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. நேற்று காலை, துணைவேந்தர் முருகேசன், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் ஆகியோர், மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். இதில், எந்த உடன்பாடும் எட்டவில்லை.இதனால், போராட்டம் தொடர்ந்தது. 'மாணவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றா விட்டால், தமிழகம் முழுதும் அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் நடத்தும்' என, அதன் மாநில செயலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment