'வீட்டில் இருந்தாலும் கொரோனா வரும்': அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 24, 2021

'வீட்டில் இருந்தாலும் கொரோனா வரும்': அமைச்சர் செங்கோட்டையன்

 'வீட்டில் இருந்தாலும்  கொரோனா வரும்': அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கு சென்றால் மட்டும், கொரோனா வரும் என்பதல்ல. வீட்டில் இருந்தாலும் வரும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:இந்திய அளவில், விளையாட்டுத் துறையில், தமிழகம், இரண்டாமிடத்தில் உள்ளது; பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக, சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய, 650 உடற்பயிற்சி ஆசிரியர்கள், பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


பள்ளிக்கு சென்றால் மட்டும், கொரோனா வரும் என்பதல்ல. வீட்டில் இருந்தாலும், கொரோனா தொற்று வரும். அதனால் தான், சளி, காய்ச்சல் உள்ள மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி, கண்காணித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment