ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 24, 2021

ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில், 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர், பணி வாய்ப்பு கேட்டு, அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க, கோபி வெள்ளாளபாளையம் பிரிவில் நேற்று காலை, 6:00 மணிக்கு குவிந்தனர். பின், அமைச்சரை சந்தித்து மனு வழங்கினர்.


இது குறித்து, அமைச்சர் கூறியதாவது:


கடந்த, 2013ல், அன்றைய சூழலில், தேவைக்கேற்ப ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வில், 82 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எந்த பணியாக இருந்தாலும், மீண்டும் தேர்வு வைத்தே, பணியில் அமர்த்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் கருத்தறிந்து, துறை ரீதியாக ஆலோசித்து, முதல்வர் மூலம் முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment