ஜிப்மர்  சிறப்பு கவுன்சிலிங்கிற்கு நாளை முதல் பதிவு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 2, 2021

ஜிப்மர்  சிறப்பு கவுன்சிலிங்கிற்கு நாளை முதல் பதிவு

 ஜிப்மர்  சிறப்பு கவுன்சிலிங்கிற்கு நாளை முதல் பதிவு


ஜிப்மரில் நிரம்பாத இடங் களுக்கான சிறப்பு கவுன்சிலிங்கிற்கு நாளை 4ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலை வர் பாலா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, காரைக்கால் பிரிவில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் மீதமுள்ள நிரப்பப்படாத 19 எம்.பி.பி.எஸ்.,இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் வரும் 7 ம் தேதி முதல் 15 ம்தேதி வரை நடக்கிறது


.நீட் தேர்வில் 450க்கு மதிப்பெண்கள் மேல் பெற்ற பொது, ஓ.பி.சி, எஸ்.சி.,பிரிவு மாணவர்கள் எம்.சி.சி., இணைய தளத்தில் நாளை 4 ம் தேதி மதியம் 12 மணி முதல் 6 ம் தேதி மதியம் 3 மணி வரை பதியலாம்.இதேபோல் சிறப்பு கவுன் சிலிற்கு புதுச்சேரி மாணவர்கள் இடம் பெறும் போது, தங்களது அசல் கல்வி, இருப்பிடம், ஜாதி சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும். 


அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளிடமிருந்து தற்காலிகமாக அசல் சான்றிதழ்களை பெற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment