கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 21, 2021

கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி

 கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை: தனியார் பள்ளிகள் சங்கம் சுவரொட்டியால் பெற்றோர்கள் அதிர்ச்சி


கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை என்று உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் பள்ளி வாயிலில் பதாகை கட்டி தொங்கவிட்டிருந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்த பள்ளிகளின் வாயிலில் இத்தகைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர், கரோனா பொதுமுடக்கத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பல பெற்றோர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால் மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. 

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். 


இதனால் கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வில் அனுமதி வழங்கப்படும் என்று பதாகைகளை வைத்துள்ளதாகக் கூறினார்.

தற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், இறுதி தேர்வினை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

No comments:

Post a Comment