பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 11, 2021

பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்

 பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்


அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ மற்றும் எம்டெக் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 


அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் மேற்கண்ட முதுநிலை பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் நடக்க உள்ளது. இதன்படி, எம்சிஏ, எம்பிஏ பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 20ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கும். 


எம்இ, எம்டெக் பட்டப்படிப்புகளுக்கு மார்ச் 21ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கும். இந்த நுழைவுத் தேர்வு தமிழகத்தில் 15 நகரங்களில் நடக்கும். தேர்வு நேரம் 2 மணி நேரம் நடக்கும். இதற்கான பதிவுகள் ஜனவரி 19ம் தேதிமுதல் ஆன்லைனில் நடக்கிறது. பிப்ரவரி 12ம் தேதி வரை பதிவு செய்யலாம். இந்த நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்படும்

No comments:

Post a Comment