சித்தா மருத்துவ படிப்பு கவுன்சிலிங் எப்போது? - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 11, 2021

சித்தா மருத்துவ படிப்பு கவுன்சிலிங் எப்போது?

 சித்தா மருத்துவ படிப்பு கவுன்சிலிங் எப்போது?


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகிய ஐந்து மருத்துவ படிப்புகளுக்கு, 330 இடங்கள் உள்ளன.


இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 இடங்கள் போக, 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.


மேலும், 24 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்களில், 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.


இந்த படிப்புகளில், 2020 -- 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 3,492 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 1,346 பேர் என, மொத்தம், 4,838 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இது குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடந்து வருகிறது.'பொங்கல் பண்டிகை முடிந்ததும், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில், கவுன்சிலிங் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment