'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : சி.பி.சி.ஐ.டி விசாரணையில் புதிய தகவல்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் பீகார், குஜராத் புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லுாரியில் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தது குறித்து 2019 செப்.,ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சென்னை மாணவர் உதித்சூர்யா, அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 'நீட்' தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள், 2 மாணவிகள், பெற்றோர் 6 பேர், புரோக்கர்கள் 3 பேர் என 17 பேர் கைது செய்யப் பட்டனர். மாணவர் ரிஷிகாந்த் முன்ஜாமின் பெற்றார்.ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கேரள,மலப்புரம் மாவட்டம் நிரமருத்துார்,
உன்னியப்பன்டே புரக்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் ரசீத் 45, ஜன., 7 ல் தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு செய்தனர்.நீதிபதி ஜன., 11 மாலை வரை போலீசார் விசாரணைக்கு அனுமதி அளித்தார்.
நேற்று விசாரணை முடிந்து மாலை 4:40ல் ரஷீத்தை மதுரை டி.ஸ்.பி., வேல்முருகன் தேனி இன்ஸ்பெக்டர்கள் சித்ராதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிமன்ற காவல் முடித்து ஜன., 21ல் மீண்டும் ஆஜர் படுத்த மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில், '' ரசீத் பெங்களூரூவில் தங்கியிருந்த போது, பீகாரை சேர்ந்த புரோக்கர் தீபக் உடன் தொடர்பு ஏற்பட்டது. ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை.
பெங்களூரூவில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்களிடம் பணம் வாங்கியதில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் பிரகாஷ்சிங்கிற்கு தொடர்பு உள்ளது. ஆனால், பிரகாஷ்சிங் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. என தெரிவித்துள்ளார். இதனால் ஆள்மாறாட்ட வழக்கில் பீகார், குஜராத் மாநில புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment