அரியர் தேர்வு குறித்து அறிக்கை: பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 11, 2021

அரியர் தேர்வு குறித்து அறிக்கை: பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

 அரியர் தேர்வு குறித்து அறிக்கை: பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு


அரியர்' தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து பல்கலைகளும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கல்லுாரிகள் மூடப்பட்டன.


 பொறியியல் பாலிடெக்னிக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் இறுதி செமஸ்டர் தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.'அரியர்' தேர்வுகளையும் ரத்து செய்தது


.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனுக்கள் தாக்கல் செய்தனர். 


'அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைகளுக்கு அதிகாரம் உள்ளது; மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டது' என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.பல்கலை மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப குழு தாக்கல் செய்த பதில் மனுக்களில் 'அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது' என கூறப்பட்டது.


தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன் தரப்பில் முறையிடப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

விசாரணையின் போது 'ஆன்லைன்' தேர்வு நடத்துவது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.இந்நிலையில் மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.


நேரடியாகவோ ஆன்லைன் வாயிலாகவோ அரியர் தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை பிப். 4க்கு தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment