பணி நிரந்தரம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
கடந்த, 10 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கோரி, கரூர் மாவட்ட தையல் ஆசிரியர்கள் சார்பில், முதல்வர் பழனிசாமிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழக பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, இசை, வாழ்வியல் திறன் போன்ற பாடங்களிலும் மாணவர்களின் திறன் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பகுதி நேரமாக ஆசிரியர்கள், 2012ல் நியமனம் செய்யப்பட்டனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். வயது முதிர்வு காரணமாக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை கலந்துகொள்ளாத நிலையில் இருக்கிறோம். தற்போது விலைவாசி உயர்வு, கொரோனா பேரிடர் போன்றவற்றை காரணமாக குறைந்த ஊதியத்தில் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். எனவே, கருணை உள்ளத்துடன் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment