கணினித்துறையில் மாணவர்கள் ஜொலிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 5, 2021

கணினித்துறையில் மாணவர்கள் ஜொலிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி


கணினித்துறையில் மாணவர்கள் ஜொலிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி


கணினித்துறையில் மாணவர்கள் ஜொலிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.கணினித்துறையில், 'சி', 'ஜாவா' போல், 'பைதான்' (Python) என்பதும் நிரல் மொழி. இன்று நாம் பயன்படுத்தும் 'டிவிட்டர்', 'யுடியூப்' என, பல சமூக ஊடகங்களும் பைதான் மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த புரோகிராமிங் முறை புதிய பாடத்திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதலில் கணினி ஆசிரியர்களுக்கு இதுகுறித்து அறிமுக பயிற்சிகள், இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


பைதான் புரோகிராமிங் ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் இதன் மூலம் திறமையான மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க முடியும்.


மேலும் 'வெப் டெவலப்பிங், டேட்டா அனலிசிஸ், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் மெடிசன் லேர்னிங், சயின்டிபிக் கம்ப்யூட்டிங்' போன்ற வளரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க ஏதுவாக இப்பயிற்சி வடிமைக்கப்பட்டுள்ளது.


துவக்கத்தில், ஆசிரியர்களுக்கு, 12 நாட்களுக்கு, ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும். அரசு பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் தங்கள் தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுவதற்கு இப்பயிற்சி மிக முக்கியமானதாக இருக்கும்.


இதற்கான பயிற்சி ஜன., 6ல் துவங்குகிறது

No comments:

Post a Comment