அடுத்த கட்ட போராட்டம் என்ன? ஜாக்டோ - ஜியோ ஆலோசனை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

அடுத்த கட்ட போராட்டம் என்ன? ஜாக்டோ - ஜியோ ஆலோசனை

 அடுத்த கட்ட போராட்டம் என்ன? ஜாக்டோ - ஜியோ ஆலோசனை


ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் நடக்கிறது.


தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்; அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களிடம், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல முறை மனு அளிக்கப்பட்டது


இந்நிலையில், கோரிக்கைகள் குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விவாதிக்க, ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் திருச்சியில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment