கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு:அட்டவணை வெளியிட்ட பல்கலைக்கழகங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 9, 2021

கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு:அட்டவணை வெளியிட்ட பல்கலைக்கழகங்கள்

 கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு:அட்டவணை வெளியிட்ட பல்கலைக்கழகங்கள்


கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்ட அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைகழகங்கள் சார்பில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைவுபெற்ற 1,300க்கும் அதிகமான கலை, அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இதுதவிர, பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், ஐடிஐ மற்றும் தொழில்நுட்ப பயிற்சியகம் என 500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.



இதனால், பொறியியல் மற்றும் கலை,அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வை நடத்த முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வரை கொரோனா பரவல் தமிழகத்தில் உச்ச கட்டத்தில் இருந்ததால் செமஸ்டர் நடத்துவது என்பது இயலாத காரியமாக இருந்தது. எனவே, கல்லூரிகளில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டார்.


 அதில், ‘‘கலை மற்றும் அறிவியலில் இளநிலை படிப்பு பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பு ஆகியவற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்; இன்ஜினியரிங்கில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற செமஸ்டர் பாடங்களின் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார். 


இந்த அறிவிப்பின் மூலம், இறுதி செமஸ்டர் தேர்வை தவிர நிலுவையில் உள்ள மற்ற அரியர் பாட தேர்வுகளை ஏப்ரல் மே மாத செமஸ்டரில் எழுத விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தியிருந்தால் அவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ தேர்ச்சி கிடைக்கும்.தமிழக அரசின் அறிவிப்பால் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பல ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ சார்பில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை சார்பில் தமிழக அரசின் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை.



 மாணவர்களின் நலன் கருதியே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறி வந்தது. யுஜிசி, ஏஐசிடிஇ தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பல்கலை நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடுதல் மதிப்பெண் தேவை என்றாலோ அல்லது கிரேடு வேண்டுமென்றாலோ அரியர் தேர்வை எழுதி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதோடு மட்டுமில்லாமல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆல் பாஸ்  வேண்டும் என்றாலும், தற்காலிகமாக தேர்ச்சி சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைத்தனர்


. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் 16 பல்கலைகழகங்கள் வழக்கமாக நடத்தக் கூடிய தேர்வு, மற்றும் அரியர் ேதர்வை ஒன்றாக நடத்த முடிவு செய்தன. அதன்பேரில் சென்னைபல்கலை சார்பில் அட்டவணை ஒன்ைற வெளியிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 அதனடிப்படையில் சென்னை பல்கலை கழகம் சார்பில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடக்க வேண்டிய தேர்வு  நடக்கிறது. ஆல்பாஸ், அரியர் வைத்துள்ள தேர்வு இப்போது நடத்தப்பட்டு வருகிறது.


இதே போன்று மற்ற பல்கலைகழகங்கள் சார்பில் தேர்வுகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், சில பல்கலைகழகங்களில்விரைவில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


 இந்த நிலையில் அரியர் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் திடீரென தேர்வு நடத்த முடிவு செய்து இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment