வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் சிக்னல் ஐ பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் விவரம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 9, 2021

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் சிக்னல் ஐ பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் விவரம்

 வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் சிக்னல் ஐ  பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் விவரம்


உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்ததும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது.


 தனிநபர் பாதுகாப்பு என்ற பெயரில் சமீபத்தில் அது வரிசையாக கொண்டு வந்துள்ள பல கடுமையான புதிய விதிமுறைகளால், அதை பயன்படுத்தும் பயனாளர்கள் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.


 வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளின்படி, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களுக்கு பகிரப்படும். இந்த விதிமுறையை ஏற்றுக் கொண்டதாக வாட்ஸ்அப்புக்கு ‘ஓகே’ போட்டால் மட்டுமே, அதன் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.


 இல்லாவிட்டால், கணக்கு முடக்கப்படும். எனவே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.


இதன் எதிரொலியாக சிக்னல் ஆப்பை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 


கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான கால கட்டத்தோடு ஒப்பிடுகையில், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 6ம் தேதி வரையில் சிக்னல் ஆப் பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை 79 சதவீதம் அதிகரித்துள்ளது. 


இந்த ஆப்பை பயன்படுத்தும்போது வாடிக்கையாளரின் செல்போன் எண் உட்பட எந்த தகவலும் சேகரிக்கப்படாது. அதேபோல், டெலிகிராம் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சமீப நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment