பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு நிற்காமல் சென்ற அரசு பேருந்து. கல்வித்துறை அமைச்சரின் சேசிங்..! - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 12, 2021

பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு நிற்காமல் சென்ற அரசு பேருந்து. கல்வித்துறை அமைச்சரின் சேசிங்..!

 பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு நிற்காமல் சென்ற அரசு பேருந்து. கல்வித்துறை அமைச்சரின் சேசிங்..!


கர்நாடக மாநிலத்தின் கல்வியமைச்சர் சுரேஷ்குமார். இவர் கடந்த சில தினத்திற்கு முன்னதாக துமகூரு மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் புறப்பட்டு சென்றுள்ளார். 


இதன்போது அங்குள்ள நீலகொண்டா பகுதியில் பள்ளிக்கு செல்ல மாணவ - மாணவிகள் பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளனர்.


இதன்போது, அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்து, அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பள்ளி மாணவ - மாணவிகள் நேரம் ஆவதால் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைக்கண்ட அமைச்சர் சுரேஷ்குமார், தனது காரின் மூலமாக பேருந்தை துரத்தி பிடித்துள்ளார்.


பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் சுரேஷ்குமார், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பேருந்திற்கு வெளியே அழைத்து கண்டித்தார்.


மேலும், மாணவ - மாணவிகள் எங்கு பேருந்திற்காக காத்திருந்தாலும் பேருந்தை நிறுத்தி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், இனியும் இதுபோல செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment