அரசின் விலையில்லா டேட்டா சேவை பேராசிரியர்களுக்கு வழங்க கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 12, 2021

அரசின் விலையில்லா டேட்டா சேவை பேராசிரியர்களுக்கு வழங்க கோரிக்கை

 அரசின் விலையில்லா டேட்டா சேவை பேராசிரியர்களுக்கு வழங்க கோரிக்கை


கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கும், விலையில்லா டேட்டா சேவை வழங்க வேண்டுமென, நுாலகர் வாசகர் வட்டத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லுாரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஜன., முதல் ஏப்., வரை நான்கு மாதங்களுக்கு, ஒரு நாளுக்கு தலா, இரண்டு 2 ஜிபி 'டேட்டா' பெற்றிட அரசு, 'டேட்டா கார்டுகள்' வழங்குவதாக அறிவித்துள்ளது.


கொரோனா காலத்தில், இத்திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், கல்விக்கு பாதிப்பில்லாமலும் இருப்பதற்கு வழியாக உள்ளது. ஆனால், தனியார் சுயநிதி கல்லுாரி ஆசிரியர்களுக்கு, மிக குறைவான ஊதியத்தில் தான் பத்து மாதங்களாக பணி செய்கின்றனர்


இதனால், அவர்களுக்கும் இந்த விலையில்லா டேட்டா சேவையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உடுமலை முதற்கிளை நுாலக வாசகர் வட்டத்தின் சார்பில், அதன் தலைவர் லெனின்பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

No comments:

Post a Comment