2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: அமைச்சர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 12, 2021

2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: அமைச்சர் தகவல்

 2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: அமைச்சர் தகவல்


கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: 


மாவட்டத்தில், 2016 முதல், 2020 வரை, 22 ஆயிரத்து, 197 மாணவ மாணவியருக்கு, 8.28 கோடி ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 6,986 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்க, 2.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது


. 'நீட்' போன்ற மத்திய அரசின் எந்தவொரு நுழைவுத்தேர்வையும், எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


 கொரோனா தொற்று காலம் என்பதால், ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் கலந்துகொள்ளும் சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஒரு நாளைக்கு, 2 ஜி.பி., வீதம் இலவச இணையதள வசதி வழங்கப்படும். மேலும், 2017-18ம் ஆண்டு மடிக்கணினி வழங்கப்படாத மாணவ, மாணவியருக்கு, விரைவில் வழங்கப்பட உள்ளது. 


இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், நகராட்சி ஆணையர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment