ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 9, 2021

ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுப்பு

 ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுப்பு


வட்டார வாரியாக, அரசு தொடக்கப்பள்ளிகளில், புதிதாக சேர்ந்த மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு, கூடுதலாக தேவைப்படுவோர் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது


.தமிழகத்தில், கடந்த பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில், தற்போது அரசுப்பள்ளிகளில் தொடக்க வகுப்பில், புதிதாக சேர்ந்துள்ளோர் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரித்துள்ளது.பல பள்ளிகளில், புதிதாக பிரிவு துவங்கும் அளவுக்கு, மாணவர்கள் சேர்ந்திருப்பதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதற்காக, மாவட்ட வாரியாக, தொடக்க வகுப்பில் உள்ள மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்களின் விகிதாச்சாரம் கணக்கிட, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது


.கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் மட்டும், நடப்பாண்டில் புதிதாக 4 ஆயிரத்து 486 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், தொடக்க வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கையே அதிகம். 


பணி நிரவலில் காத்திருப்போர் பட்டியல் தாண்டி, கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால்,விரைவில் புதிய நியமனங்களுக்கு வாய்ப்பிருப்பதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment: