போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 14, 2021

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு

 போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு


நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். 


ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது


. கொரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் 16ஆம் தேதி தொடங்க இருப்பதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு மருந்துகள் அளிப்பதில் சிரமம் என்பது காரணமாக தடுப்பூசி முகாம் ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. 


ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment