தேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

தேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்

 தேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்


அஸ்ஸாமில் புத்தாண்டான ரங்காலி பிஹூ, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஆகியவற்றை மனதில் வைத்தே அஸ்ஸாம் பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.


இந்த ஆண்டு (2021) அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையத்தின் உயர் அதிகாரிகள் 3 நாள் பயணமாக அஸ்ஸாம் சென்றுள்ளனர்.


 அங்கு அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.


இந்நிலையில் தேர்தல் தேதி குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறும்போது,  அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தியுள்ளோம். 


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு முன்னதாகவே அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும்.


அத்துடன் ஏப்ரலில் கொண்டாடப்பட உள்ள அஸ்ஸாமிய புத்தாண்டு பண்டிகையையும் (ரங்காலி பிஹூ) நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம். 


கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றியே தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலுக்கு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். 


தற்போது 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்றிருப்பதை ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என குறைக்க இருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment