MBBS முதலாமாண்டு வகுப்புகள் தேதிகள் அறிவிப்பு:மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, January 18, 2021

MBBS முதலாமாண்டு வகுப்புகள் தேதிகள் அறிவிப்பு:மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்

 MBBS முதலாமாண்டு வகுப்புகள் தேதிகள் அறிவிப்பு:மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்


எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுக வகுப்புகள் வரும் புதன்கிழமை (ஜன.20) முதல் தொடங்குகின்றன.


 அப்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கல்லூரிகளுக்கு வரும் அனைத்து மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் தொடா்ச்சியாக, பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் வழக்கமான பாட வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 இதுதொடா்பான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு வெளியிட்டுள்ளாா்


தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த நவம்பா் 18-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 13-ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் எம்பிபிஎஸ் படிக்க 336 பேரும், பிடிஎஸ் படிக்க 110 பேரும் என மொத்தம் 446 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 


இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகளை வரும் 20-ஆம் தேதி தொடங்குமாறு அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வருக்கு மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:


முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கான அறிமுக வகுப்புகளை 20-ஆம் தேதி தொடங்க வேண்டும். 


அதன் தொடா்ச்சியாக, பாட வகுப்புகள் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கலாம். மாணவா்களுக்கு கரோனா தொற்றை கண்டறியும் ஆா்டிபிசிஆா் பரிசோதனை மற்றும் இதர மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வது அவசியம்.


கல்லூரிகளில் சோ்ந்துள்ள அனைத்து மாணவா்களின் சான்றிதழ்களையும் சரிபாா்க்க வேண்டும். 


மாணவா்களின் இடது கை பெருவிரல் ரேகை, விழித்திரையைப் பதிவு செய்ய வேண்டும். மாணவா்களின் சமீபத்திய புகைப்படத்தை பெற வேண்டும். அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.


 பின்னா் அனைத்து ஆவணங்களையும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜீன்ஸ், டீ-சா்ட் கூடாது:


 கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சா்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வாா் கமீஸ், சுடிதாா் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். மாணவிகள் லெகிங்ஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது. மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்லிடப்பேசி உபயோகிக்கக்கூடாது.


 கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியா்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment