ஆன்லைன் தேர்வில் 10 சதவீதம் மார்க் தான்: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, February 3, 2021

ஆன்லைன் தேர்வில் 10 சதவீதம் மார்க் தான்: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

 ஆன்லைன் தேர்வில் 10 சதவீதம் மார்க் தான்: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, 'ஆன்லைன்' தேர்வில், மாணவர்கள் வெறும், 10 சதவீத மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளதால், கற்பித்தலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது.


தமிழகத்தில், கொரோனா பிரச்னையால், 10 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் துவங்கின. பொதுத்தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் கற்பிக்கப்பட்டதை, மாணவர்கள் எந்த அளவுக்கு படித்துள்ளனர் என்பதை அறிய, ஆன்லைன் வழி தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், மாணவர்களின் விடைகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலானவர்கள், 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், காலை முதல் மாலை வரை, நேரத்தை வீணடிக்காமல் பாடங்களை நடத்த வேண்டும்.சிறு தேர்வுகளை தினமும் நடத்தி, மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment