ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து : ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 3, 2021

ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து : ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு

 ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து : ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு


ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ததை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் வரவேற்றுள்ளார்.


அவர் கூறியதாவது: போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு, குற்ற நடவடிக்கையையும் ரத்து செய்தது காலதாமதம் என்றாலும் வரவேற்கிறோம். ஜாக்டோ~ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மீது அரசு அடக்குமுறை, வழக்கு போட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. பலர் தொலை துாரங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சிறை சென்றவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். இது ஆறாத காயமாக இன்றளவும் உள்ளது. 


நடவடிக்கை உள்ளானவர்கள் பணி ஓய்வுக்கு அனுமதிக்காமல் , பதவி உயர்வு வழங்காமல் துயரத்திற்குள்ளாகினர். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 1973 பேர் பாதிக்கப்பட்டனர்.எங்களின் கோரிக்கை பற்றி முதல்வர் ஒரு வார்த்தை கூட கூறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.


 அரசு தாமதிக்காமல் ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும். வேலை நிறுத்த காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன் பணியாற்றிய இடத்தில் பணியமர்த்திட வேண்டும். கடந்த காலத்தை போல் வேலைநிறுத்த காலத்தை முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment