தினமும் 12 கி.மீ. நடந்து சென்று உணவு வழங்கிய அங்கன்வாடி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக குன்னுார் அங்கன்வாடி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே காட்டேரி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் அங்கன்வாடி ஆசிரியர் வெண்ணிலா(40) .
கொரோனா ஊரடங்கு காலத்தில், பழங்குடியின கிராமங்களான புதுக்காடு, கீழ் சிங்காரா பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கி வந்தார். மேலும் நாள்தோறும் 12 கி.மீ. நடந்து சென்று மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுளை வழங்கினார்
இந்த நிலையில் அண்மையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.
அதில் வெண்ணிலாவின் சேவையை பாராட்டி, தேசிய மகளிர் ஆணையம் சார்பில்,”கோவிட் உமன் வாரியர்ஸ் - ரியல் ஹீரோயிஸ்” என்ற விருதை டெல்லியில் வழங்கி வெண்ணிலாவை கவுரவித்துள்ளது. இந்த விருதினை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வழங்கினார்.
No comments:
Post a Comment